நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா பேட்டி

அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
உதகை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் நிலத்தடி கேபிள் பதிக்கும் பணிக்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் வனத்துறையின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உதகையில் பேட்டி.................................. உதகை அரசு தமிழகம் விருந்தினர் மாளிகையில் நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர், உதகையில் குடிநீர் பிரச்சனை நிலவி வரும் நிலையில் பிரச்சனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக கூறினார். மேலும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை என தமிழக முதலமைச்சரிடம் கூறியதை தொடர்ந்து சுமார் 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் மழை மற்றும் காற்றின் காரணமாக உதகை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ் வேலி அணைப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நிலத்தடி கேபிள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசின் கீழ் இயங்கும் வனத்துறை அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், டெல்லியில் இது குறித்து தான் பேசி வருவதாகவும் விரைவில் அனுமதி பெற்று நிலத்தடி கேபிள்கள் அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் சீராக்கப்படும் என அவர் தெரிவித்தார். பேட்டி: ஆ. ராசா, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
Next Story