பிடிபட்ட சிறுத்தை சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது.

வனத்துறை அலுவலர்கள் விடுவித்தனர்
கூடலூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி கூண்டு வைத்து பிடிபட்ட சிறுத்தை சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினர் மூலம் நம்பியார் குன்னு அருகேயுள்ள சீராள் கிராம பகுதியில் சிறுத்தையை சிக்கியது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கூடலூர் வனக்கோட்டம், பிதிர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பிதிர்காடு வனப்பிரிவு, அய்யன்கொல்லி காவல் பகுதி, நரிக்கொல்லி மற்றும் வாளாடு மகாவிஷ்ணு கோவில் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில், காயம் அடைந்த நிலையிலுள்ள ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக நடமாடுவது குறித்து தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாண்புமிகு முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் அவர்களின் ஆணையின்படி, முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குனர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், கூடலூர் மாவட்ட வன அலுவலர் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக விலங்கு மருத்துவ அதிகாரியின் ஆலோசனையுடன், குறித்த பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு (கேஜ்) வைக்கப்பட்டது. வைக்கப்பட்ட கூண்டில் அந்த சிறுத்தை பாதுகாப்பாக சிக்கியது. சிக்கிய சிறுத்தை, முதுமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுத்தையை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது. உரிய நேரத்தில் கூண்டு வைத்து சிறுத்தை பிடித்து வனப்பகுதி விட்டதற்கு பகுதி மக்கள் வனத்துறை இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த னர்
Next Story