பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் இலவச திருமணம் 

இலவச திருமணம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், புதன்கிழமை அன்று பேராவூரணி அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் ஆலயத்தில் ஏழை ஜோடி ஒன்றுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை வகித்து, மங்கள நாணை எடுத்து தந்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் செய்து கொண்ட சு.நீலகண்டன்- மு.அனிதா தம்பதியர்க்கு தலா 4 கிராம் மாங்கல்யம் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 81 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.  இதில், பேராவூரணி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், கோயில் செயல் அலவலர் அருண் பிரகாஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் கி.சந்திரசேகரன், பரம்பரை அறங்காவலர்கள் பெ.கணேசன் சங்கரன், சு.குப்பமுத்து சங்கரன் மற்றும் கோயில் பணியாளர்கள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
Next Story