பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு கடனுதவி முகாம்

X
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், ஆகிய திட்டங்களுக்கான கடன் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்கள் 09.07.2025 அன்று தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 10.07.2025 அன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11.07.2025 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் பிறபகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் ஆவர். எனவே, சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதிச் சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் /திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பம் செய்யும் சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான்(அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

