இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மன்னார்குடியில் இலவச திருமணம்

X
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நேற்று 20 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, பீரோ, கட்டில், மெத்தை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை திருவாரூர் துணை ஆணையர் ,கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிஇளவரசன், மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை. சோழராஜன்,கோவில் செயல் அலுவலர் மாதவன்,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.கே.பி.மனோகரன், லதா வெங்கடேஸ்வரன், துரை.நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

