இடைச்சுமூலையில் மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

X
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே இடைச்சு மூலை கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலுக்கு திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 30-ம் தேதி முதல் யாக குண்டங்கள் அமைத்து மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட குடங்களை சுமந்து கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் இதனைத் தொடர்ந்து மகாகாளியம்மன் விநாயகர் கற்பக விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
Next Story

