வடிந்த காவிரி வெள்ளம் வீடுகளுக்கு திரும்பிய பொதுமக்கள்

வடிந்த காவிரி வெள்ளம் வீடுகளுக்கு திரும்பிய பொதுமக்கள்
X
குமாரபாளையம் காவிரி வெள்ள பாதுகாப்பு மையத்தில் உள்ள பொதுமக்கள் காவிரியில் வெள்ளம் வடிந்ததால் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்
கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழையால் கர்நாடக மாநில அணைகள் நிரம்பியதால் அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் நீர், மேட்டூர் அணைக்கு வந்தது. அதன் கொள்ளவான 120 அடியை எட்டிய நேரத்தில் காவிரி ஆற்றில் வரும் உபரி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி கரையோர பகுதியில் வசித்த, 36 குடும்பத்தைச் சார்ந்த 84 நபர்கள் கலைமகள் வீதி நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் உணவு வழங்கப்பட்டது. நேற்று காவிரியில் வெள்ளம் வடிந்ததையடுத்து, இந்த பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்
Next Story