வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் விஷமருந்தி பலி

X
Komarapalayam King 24x7 |2 July 2025 9:15 PM ISTகுமாரபாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் விஷமருந்தி பலியானார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவாணன், 24. பி.எஸ்.சி. படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். சில நாட்களாக வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த நிலையில், இவர் நேற்றுமுன்தினம் மாலை 03:00 மணியளவில் வீட்டில் தூங்க சென்றுள்ளார். வெளியில் சென்ற இவரது தந்தை நகராஜ், 54, வந்து பார்த்த போது, வாயில் நுரை தள்ளியபடி இருந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
