தீப்பொறி பறக்கும் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு கலெக்டர் நடவடிக்கை

தீப்பொறி பறக்கும் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு கலெக்டர் நடவடிக்கை
X
குமாரபாளையத்தில் தீப்பொறி பறக்கும் டிரான்ஸ் பார்மர் கலெக்டர் உத்திரவுபடி சீரமைக்கப்பட்டது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஜே .கே. கே.வீதியில் முருகன் கோவில் எதிரில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அடிக்கடி தீப்பொறி ஏற்பட்டு, சாலையில் செல்வோர் மீது விழுந்து வருகிறது. இதன் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் வசம் பலமுறை நேரில் புகார் சொல்லியும், மனுக்கள் கொடுத்ததும் எவ்வித பலனும் இல்லை. .கத்தாளபேட்டை, திருவள்ளுவர் வீதி, ஜே,ஜே,ஜே, சாலை உள்ளிட்ட பல பகுதி பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான் சேலம் பிரதான சாலைக்கு சென்று வருகிறார்கள். மிகவும் குறுகிய சாலை என்பதால், தீப்பொறி ஏற்பட்டால், பொதுமக்களால் ஒதுங்க கூட முடியாது. அவர்கள் மேலே தீப்பொறி விழுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க கோரி, மாவட்ட கலெக்டர் துர்காவிடம், , மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த கலெக்டர் துர்கா உத்திரவின்படி தீப்பொறி பறக்கும் டிரான்ஸ் பார்மர் சீரமைக்கப்பட்டது.
Next Story