இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது
X
தீவிர விசாரணை செய்ததில் ஒரு இளஞ்சிரார் மற்றும் மணிகண்டன் (22) த/பெ பெருமாள், மாரியம்மன் கோவில் தெரு, குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம். ஆகியோர்கள் இணைந்து மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்த நிலையில் மேற்படி எதிரிகளை கைது செய்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு மாதவி கிராமத்தில் சேகர் (50) த/பெ ராமசாமி, தொண்டமாந்துறை, வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம். என்பவர் வடக்குமாதவி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மேற்படி வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை செய்ததில் ஒரு இளஞ்சிரார் மற்றும் மணிகண்டன் (22) த/பெ பெருமாள், மாரியம்மன் கோவில் தெரு, குன்னம் வட்டம் பெரம்பலூர் மாவட்டம். ஆகியோர்கள் இணைந்து மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்த நிலையில் மேற்படி எதிரிகளை கைது செய்து இன்று 02.07.2025- ஆம் தேதி பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினர் எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story