கெலமங்கலம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.

கெலமங்கலம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
X
கெலமங்கலம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள பிதிரெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (36) விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் கணவன்,மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவம் அன்று மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கெலமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story