சங்கரன்கோவில் ஓமினி கார் முன்பக்க டயர் வெடித்து ஒருவர் பலி ஐந்து பேர் படுகாயம்.

X
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சங்கரன்கோவிலில் வழியாக கழுகுமலை நோக்கி ஓமினி காரில் சென்று கொண்டிருந்தபோது அழகனேரி அருகே வரும்போது திடீரென முன் பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே உள்ள பாலத்தின் மீது மோதியதில் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்ததில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாடசாமி,நாராயணன் மற்றும் குழந்தைகள் உட்பட 5பேர் விபத்துக்கு உள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓம்னி காரில் கழுகுமலை நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியதோடு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story

