தலைவன்கோட்டையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தாருகாபுரத்தில் தலைவன் கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத மத்தியஸ்த நாதசுவாமி திருக்கோவில் உள்ளது. பஞ்ச ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தில் தேரோட்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 73 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதடைந்ததனால் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. 1952 முதல் திருவிழா நடைபெறாமல் இருப்பதால் இக்கோவில் அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் திருவிழா நடத்த தேர் சரி செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து வந்தனர். இந்நிலையில் வாசுதேவநல்லூர் தொழிலதிபர் எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தலைவர் எஸ். தங்கப்பழம் குடும்பத்தார்கள் மூலம் கடந்த வருடம் சிதிலமடைந்த தேர் அப்புறப்படுத்தப்பட்டு முழுவதுமாக 14 அடி உயரத்தில் தேர் முழுவதும் புதிதாக செய்ய பட்டது.எந்த தேர்களிலும் இல்லாத வகையில் சிற்பங்கள்,650 தெய்வங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு புதிய தேர் உபயமாக செய்யப்பட்டது. இந்த புதிய தேர் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நேற்று நடந்தது. காலை 7 மணி அளவில் திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 10.25 மணியளவில்புதிய தேர் வெள்ளோட்ட தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவன்கோட்டை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஜமீன்தார் ஐ.ராஜாராம் சேவுகப் பாண்டியன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செ. ராஜேந்திரன், புதிய தேர் உபயதாரர் எஸ். தங்கப்பழம் குடும்பத்தார்கள் மற்றும் சிறப்ப சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன். முத்தையா பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

