குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு

X
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (47) கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து வெளியே சென்றார். நேற்று காலை 6.30 மணி அளவில் மணவிளை கோட்டுபாறை குளத்தின் கரையில் ஜெயசீலனின் செருப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் இருந்தது. தீயணைப்புத்துறையினர் உதவியுடன் குளத்தில் தேடிய போது ஜெயசீலன் இறந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டார், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துவிட்டு மனைவி ராஜலெட்சுமி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

