ஆட்டையாம்பட்டி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

X
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கும்பாடிப்பட்டியை சேர்ந்த தொழிலாளி முருகேசன். இவர் வீட்டின் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி முருகேசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முருகேசனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story

