சகதியில் மாட்டிக் கொண்ட பேருந்தால் மக்கள் அவதி

சகதியில் மாட்டிக் கொண்ட பேருந்தால்  மக்கள் அவதி
X
மதுரை உசிலம்பட்டி விக்ரமங்கலத்தில் சேற்றில் மாட்டிக் கொண்ட பேருந்தால் பயணிகள் அவதி அடைந்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் அருகே சந்திப்பில் பஸ்சின் முன்புற சக்கரம் ரோட்டில் புதைந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதித்தது.குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி பத்து நாட்களாக நடப்பதால் ரோடு மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல், மக்கள் நடக்க முடியாமல் தடுமாறி விழும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூலை.2) காலை இந்த சந்திப்பு ரோட்டில் உசிலம்பட்டி பேருந்தின் சக்கரங்கள் சரிவர மூடப்படாத மணலில் புதைந்து கொண்டதால் பேருந்தை இயக்க முடியவில்லை. இதனால் மதுரை, நிலக்கோட்டை, வத்தலகுண்டு செல்லும் பேருந்துகள் செல்ல முடியாமல் அப் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. பின் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.
Next Story