கோவை: கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்!

கோவை: கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்!
X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு வழக்கறிஞர் பெயரில், வெடிகுண்டு மிரட்டல் உள்ளடங்கிய கடிதம் தபாலில் வந்ததால் பரபரப்பு.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு வழக்கறிஞர் பெயரில், வெடிகுண்டு மிரட்டல் உள்ளடங்கிய கடிதம் நேற்று தபாலில் வந்தது. கடிதத்தில், அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்க திட்டம் உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கினால் தகவல் கொடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், வழக்கறிஞர் முத்துசாமி தனக்கு தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல மற்ற மாவட்டங்களுக்கும் இதே மாதிரியான கடிதங்கள் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. கடிதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story