பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது

X
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு 4 ரோடு பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்திற்கு சென்று உள்ளார். பின்னர் எந்திரத்தை கையால் உடைத்து உள்ளார். அப்போது எந்திரத்தில் இருந்து அபாய அலாரம் ஒலித்தது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வராத ஆத்திரத்தில் எந்திரத்தை உடைத்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

