வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிற்கூடங்கள் ெதாடங்க விண்ணப்பிக்கலாம்

X
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மேற்கு தாலுகா அரியாகவுண்டன்பட்டியில் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்காக உடனடியாக தொழில் தொடங்குவதற்கு தேவையான வசதிகளுடன் 102 தொழிற்கூடங்களை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகம் தமிழ்நாடு சிட்கோ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மாடி தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்கூடங்கள் வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு முழு கிரைய விற்பனை முறை மற்றும் தவணை முறை விற்பனை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு தயாராக உள்ளது. எனவே வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாக தொழிற்கூடங்களை ஒதுக்கீடு பெற விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள கிளை மேலாளர் சத்தியமூர்த்தியை சிட்கோ கிளை அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, 5 ரோடு, சேலம் - 4 என்ற முகவரியிலும், [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story

