தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

X
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழர்களின் கலாசாரம், பண்பாடு என அனைத்தையும் பாஜக அரசு அழிக்க நினைக்கிறது. இவற்றை பாதுகாக்கவே ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வினர் மக்களுக்கு என்ன செய்தார்கள். தி.மு.க., எதிர்கட்சியாக இருக்கும் போதும் மக்களை தேடிச்சென்று மக்களுக்காக பணியாற்றியது. (இன்று) முதல் 45 நாட்கள் கட்சியினர் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்காக தீவிர பணியாற்ற வேண்டும். இந்த இயக்கத்துக்கான அடித்தளமாக திண்டுக்கல் மாவட்டம் இருக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த துரோகம். நாம் சரியான அடித்தளம் அமைத்தால் தேர்தலில் எந்த கூட்டணியும் நம்மை ஒன்றும் செய்யாது. மதவாத சக்திகளோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என அ.தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால், கூட்டணிக்காக இங்கிருந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் மானத்தை அடகு வைத்துவிட்டார். மக்களை சந்திப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. மானம், மொழி, இனம், மரியாதை, உரிமை காக்க மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு நிற்கவேண்டும். என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநகர பொருளளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

