ராணிப்பேட்டையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்!

X
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூங்காவனம் வரவேற்றார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இலக்கிய அணி இணை செயலாளர் ஈரோடு இறைவன், முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வினோத் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம் துரைமஸ்தான், குமுதா குமார், ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலை வர் சுஜாதாவினோத் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

