நெமிலி அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு!

நெமிலி அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு!
X
நெமிலி அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்பு!
நெமிலியை அடுத்த கீழ்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வரதம்மாள் (வயது 55). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேடியும் கிடைக்காததால் இது குறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை கீழ்வெண்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பெண் பிணம் மிதந்து உள்ளது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கிணற்றில் கிடந்த உடலை மீட்டு விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் பிணமாக கிடந்தது காணாமல் போன வரதம்மாள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story