திருவேங்கடத்தில் தொடர்மழையால் வெள்ளைச்சோளம் விளைச்சல் அமோகம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதிகளில் தொடர் மழையால் மானாவாரி விவசாயத்தில் வெள்ளை சோளம் அமோக விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராகியுள்ளது. பழங்கால சிறுதானிய வகைகளுக்கு தற்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் திருவேங்கடம், மைய்பாறை, வரகனூர், கரிசகுளம், கலிங்கப்பட்டி உள்ளிட்ட மானாவாரி விவசாயிகள் இன்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வெள்ளைச் சோளத்திற்கு தமிழக அரசு நல்ல விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என அப்பகுதி உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

