கரூர்- கோடங்கிபட்டியில் சுவாமி தரிசனம் செய்தார் செந்தில் பாலாஜி.
கரூர்- கோடங்கிபட்டியில் சுவாமி தரிசனம் செய்தார் செந்தில் பாலாஜி. திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைக்க சென்றார். வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரச்சாரத்தை இந்த கிராத்தில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தொடங்குவது வழக்கம். அதே போன்று இன்றும் அக்கோவிலில் அப்பகுதி திமுக பொறுப்பாளர்களுடன் தான் நினைத்தது போல உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதற்காக சாமி தரிசனம் செய்தார்.
Next Story






