கரூர்- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூர்- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை இன்று முதல் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டியில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்பகுதியில் வீடு வீடாக சென்று அவர்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கி, அரசின் திட்டங்களில் அவரது குடும்பத்தில் எந்தெந்த திட்டங்களில் எத்தனை பேர் பயனடைந்து வருகிறார்கள் என்று கேட்டு,மேலும் அவர்களது கோரிக்கைகள் என்னவென்று கேட்டுஅறிந்த அவர், திமுகவில் இணைந்து கொள்கிறீர்களா என கேட்டு அவர்களை மொபைல் ஆப் மூலம் உறுப்பினர்களாக சேர்க்கும் பணியை துவக்கி வைத்தார்.
Next Story





