மது கடத்தல் கடத்தியவர் கைது

X
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இதில், பங்களாபுதூர் போலீசார் கலியூர் பிரிவில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியாக மொபட்டில் வந்த முதியவரை பிடித்து சோதனை செய்தபோது, டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதற்காக, மதுப்பாட்டில்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கலியூர் காலனியை சேர்ந்த வேலுசாமி (65) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு நசியனூர் சாலையில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த திண்டல் காரப்பாறையை சேர்ந்த மாதையன் (49) என்பவரை ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக ஆசனூர் சோதனை சாவடியில் கோபி மதுவிலக்கு போலீசாரால் சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பவரை கைது செய்யப்பட்டு, 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

