நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் செந்தில் பாலாஜி.

நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் செந்தில் பாலாஜி.
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார் செந்தில் பாலாஜி. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தமிழகத்தில் 208 நகர்ப்புற நல வாழ்வுமையத்தையும் ,50 கிராமப்புற நல மையங்களையும் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நான்கு நகர்ப்புற நல வாழ்வு மையமும் உள்ளடக்கம் ஆகும். காணொளி காட்சி வாயிலாக மு.க ஸ்டாலின் திறந்து வைத்த உடன் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பெரிய கோதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மருத்துவமனையை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர்கவிதா கணேசன் , துணைமேயர் தாரணி சரவணன்,ஆணையர் சுதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் , மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story