ஆலங்குளம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ஆலங்குளம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
X
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கீழக்கலங்கல் கிராமத்தில் புதிதாக கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திறக்கப்பட உள்ளது. ஆலங்குளம் வட்டாரம் குறிப்பாக கீழக்கலங்கல் சுற்று வட்டார பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் தேவைப்படுவதை முன்னிட்டு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.20 கோடி மதிப்பிலான புதிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் குறிச்சான்பட்டி, பலபத்திரராமபுரம், கீழக்கலங்கல் துணை சுகாதார நிலையங்களின் 18 கிராமங்கள் உள்ளடக்கிய சுமார் 17,945 மக்கள் தொகை கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுற்று வட்டார பொதுமக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தினை பயன்படுத்தி மருத்துவ சேவையினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story