சங்கரன்கோவில் அய்யா வைகுண்ட தர்ம பதியில் சிறப்பு வழிபாடு

சங்கரன்கோவில் அய்யா வைகுண்ட தர்ம பதியில் சிறப்பு வழிபாடு
X
அய்யா வைகுண்ட தர்ம பதியில் சிறப்பு வழிபாடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்குபுரம் 3-ம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி அய்யா வைகுண்ட தர்மபதியில் வைகுண்டரின் 193-வது அவதார ஆண்டை முன்னிட்டு 49-வது தர்ம காட்சி நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 28-ந்தேதி மாலை 6 மணிக்கு தர்மம் எடுத்தல் நிகழ்ச்சியும், 29-ந்தேதி காலை 9 மணிக்கு அய்யாவாகனபவனி நிகழ்ச்சியும், சந்தனக்குடம் வீதி உலாவும், மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு, அன்னதர்மம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு புஷ்ப வாகனம் பவனி உலாவும் அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அன்னதர்ம காட்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து 30-ந்தேதி அலங்கார காட்சியும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தும் குருநாதர் பாளை முடிமன்னன் நாராயணசாமி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story