அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில், காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மூல காரணமாக, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அஜித்குமாரை திட்டமிட்டு கொலை செய்ய நிக்கிதா என்பவர் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவர்மீது கொலைக் குற்றச்சாட்டுடன் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதே சமூக நல இயக்கங்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தி சமூக நல இயக்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

