எஞ்சிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர்

X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஒரணியில் தமிழ்நாடு என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது திமுகவின் எஞ்சிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பியதற்கு, தேர்தல் வாக்குறுதியாக சிலிண்டர் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கீடு போன்ற எங்களின் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறது. கொடுத்த வாக்குறுதி எங்களுக்கும் ஞாபகம் இருக்கிறது. அதை செய்வதற்கு அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து முதல்வர் நிச்சயமாக செய்து தருவார். மூன்றாவது முறையாக இந்தியாவில் வெற்றி பெற்று பாஜக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதியை யாரும் கேட்கப் போவதில்லை. பிரதமர் மோடி அஞ்சாமல் சொன்னாரே, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் வேட்டையாடி இந்தியாவில் இருக்கக்கூடிய குடிமகன்களின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வரவு வைப்பேன் என்று சொல்லி இன்று மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார் என குற்றம் சாட்டினர். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் தான் நம்பிக்கையோடு இருங்கள். இவ்வளவு செய்தவர்கள் அதை செய்யாமல் விட்டு விட மாட்டோம் என தெரிவித்தார்.
Next Story

