குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
X
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகையான மானிய திட்டங்களில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021-ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான மானிய திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நிறுவன உரிமையாளர்கள் மேற்காணும் திட்டத்தில் பயன்பெற https://www.msmetamilnadu.tn.gov.in/incentives என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story