களியக்காவிளை பஸ் நிலையம் ஆய்வு

களியக்காவிளை பஸ் நிலையம் ஆய்வு
X
கலெக்டர்
களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பீட்டில் களியக்காவிளை புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  இப்பேருந்து நிலையமானது தரைத்தளம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என்று மூன்று தளங்களை கொண்டது. மொத்தம் பரப்பளவு 4063.29 சதுர மீட்டர் ஆகும். பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் அழகு மீனா அறிவுறுத்தினார்.  நடைபெற்ற ஆய்வில் ஒன்றிய பொறியாளர் அஜிதாகுமாரி,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியம், சுரேஷ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Next Story