வேளாண் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

மதுரை மேலூர் விநாயகபுரம் வேளாண் மையத்தை இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் FNS வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் நரசிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த தாமரை செல்வன் மற்றும் தெற்குதெருவை சேர்ந்த ராஜா உசைன் ஆகிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பவர் டில்லர்களை இன்று (ஜூலை.3) ஆய்வு செய்து, திட்டத்திற்கு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் குறித்தும் பவர் டில்லர் இயந்திரத்தின் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி மையத்தை ஆய்வு செய்து, பயிற்சியில் கலந்து கொண்டுள்ள இராமநாதபுரம் விவசாயிகளிடம் கலந்துரையாடி பயிற்சியின் பயன் குறித்து கேட்டறிந்தார். மேலும், விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும் நீர் மேலாண்மை முறைகள் குறித்தும் முறையாக பயிற்சி வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்
Next Story