வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர்

மதுரை திருமங்கலம் வடக்கம்பட்டி கிராமத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக இன்று (ஜூலை .3) ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் வடக்கம்பட்டி கிராமத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் சேடப்பட்டி மணிமாறன் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அவர்களை திமுகவில் உறுப்பினராக இணைய ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story