ஓரணியில் தமிழ்நாடு "பாக நிலை முகவர்கள்,பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஓரணியில் தமிழ்நாடு பாக நிலை முகவர்கள்,பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
X
பெரம்பலூர் மாவட்டம், "ஓரணியில் தமிழ்நாடு " பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பாக நிலை முகவர்கள், பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BLA-2, BDA) ஆகியோருக்கு டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் செயல்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு "பாக நிலை முகவர்கள்,பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது! தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன்- தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் பா‌.கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், "ஓரணியில் தமிழ்நாடு " பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பாக நிலை முகவர்கள், பாக நிலை டிஜிட்டல் முகவர்கள் (BLA-2, BDA) ஆகியோருக்கு டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் செயல்படுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் பா.கேசவன் கலந்து கொண்டு டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து விளக்கி பேசினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செ.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந.ஜெகதீஷ்வரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன்,குரும்பலூர் பேரூர் கழகச் செயலாளர் எம்.வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story