பெரியாத்துகுறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தனது சொந்த வீட்டையே விற்று: அரசுக்கு இடம் வாங்கி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்* ஊர் பொதுமக்கள் பாராட்டு.

பெரியாத்துக்குறிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தனது சொந்த வீட்டிலேயே வைத்து இடம் வாங்கிக் கொடுத்த பொதுமக்கள் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாவடராயரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
அரியலூர், ஜூலை.3- ஆண்டிமடம் அருகே -  வாக்களித்த மக்கள் மருத்துவ சேவை பெரும் வகையில் தனது வீட்டை விற்று இரண்டு நண்பர்களின் உதவியுடன் 13 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வாங்கி கொடுத்த முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பாவாடைராயரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர் அரியலூர் மாவட்டத்தில் எல்லை பகுதியில் உள்ள பெரியாத்துக்குறிச்சி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி முழுவதும் வயல் மற்றும் காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் விஷக்கடி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை பெறுவதற்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் ஸ்ரீமுஷ்ணம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததால் அவசர சிகிச்சை கூட பெற முடியாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.இதனால் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களித்த மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் வகையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பாவாடைராயர்  தனது வீட்டை விற்று இரண்டு நண்பர்களின் உதவியுடன் அதே கிராமத்தில் 56 சென்ட் இடத்தை ரூ 13 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அந்த இடத்தில் ஆண்டிமடம் ஊராட்சி சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அரசுக்கு விண்ணப்பித்தார். இதனையடுத்து நண்பர்களின் உதவியுடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வாங்கி கொடுத்த 56 சென்ட் இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது  ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள் முடிவடைந்து இன்று காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் திறந்து வைத்தார் இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவையினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் தன்னை ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்த மக்களுக்கு தனது சொந்த பணத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனது வீட்டையே விற்று அதன் மூலம் கிடைத்த தொகை மற்றும் இரண்டு நண்பர்களின் உதவியுடன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட இடம் வாங்கிக் கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பாவாடராயருக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சா.க. கண்ணன் சால்வை அணிவித்து கௌரவித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாவாடராயர் கூறும் போது :- சிறுவயது முதலே எனக்கு இது போன்று மருத்துவமனையை ஊரில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அதற்காகத்தான் நான் தலைவராக தேர்ந்தெடுத்தப்பட்டு தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் மருத்துவமனையை கட்டுவதற்காக பல்வேறு முயற்சி மேற்கொண்டேன் அதற்கு இடம் இல்லாத சூழ்நிலையில் அதற்கான ஒரு இடத்தை வாங்க முயற்சித்தேன் பணம் இல்லாததால் என்னுடைய வீட்டையும் விற்று அந்த பணத்தில் இடத்தை வாங்கி அரசிடம் ஒப்படைத்து தற்பொழுது மருத்துவமனை கட்டப்பட்டு அதனை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்பொழுது எனது பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனக்கு இது திருப்தி  அளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் பகுதி மக்கள் கூறும்போது அவருடைய ஏழ்மை நிலையில் யாரும் இதுபோன்று செய்ய மனம் வராத நிலையில் தனது கிராம மக்களுக்காக தன் வீட்டையே விற்று மருத்துவமனைக்காக இடம் கொடுத்துள்ளார்.உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும்.என்றனர்.
Next Story