நீதி கேட்டு விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜனனி என்பவர் காதலிக்க மறுத்ததால் குத்திக் கொலை மேலும் 17 வயது மாணவி லட்சியாவிற்கு கத்திக்குத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி அரசு வேலை வழங்கக்கோரி அனைத்து விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகத் குமார் என்பவரது மகள் ஜனனி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் காதலிக்க மறுத்த காரணத்தினால் கடந்த 28 5 2025 அன்று குற்றவாளிகளால் கத்தியால் குத்து குத்தி கொலை செய்யப்பட்டார் ஜனனியின் உறவுக்கார பெண்ணான பதினோராம் வகுப்பு மாணவி லட்சியாவிற்கும் கத்தி குத்து விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று தூத்துக்குடி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி ஜாமீன் வழங்காமல் அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஜனனி குடும்பத்திற்கு அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் பெண் குழந்தைகளை பாதுகாக்க தமிழக அரசு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் முன்னதாக கொலை செய்யப்பட்ட மாணவி ஜனனியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story

