தமிழ் படைப்பாளர்கள் சங்க முப்பெரும் விழா

தமிழ் படைப்பாளர்கள் சங்க முப்பெரும் விழா
X
விழா
சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தில் முப்பெரும் விழா நடந்தது. Advertisement இலக்கிய சொற்பொழிவு, உலக ரத்த தான தினம், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் வேலு தலைமை தாங்கினார். முத்துக்கருப்பன், குசேலன், செல்வராஜ், சண்முகபிச்சப்பிள்ளை, லயன்ஸ் மாவட்ட தலைவர் வேலு முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.துணைத் தலைவர் கமலநாதன், ஆசிரியர் ரகுநந்தன், கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன், ஆசிரியர் லஷ்மிபதி, சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்தரராஜன் ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் செல்வமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Next Story