பேரூர்: பட்டீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா, தனது கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். 2ம் நூற்றாண்டில் சோழர்கோன் கரிகாலனால் கட்டப்பட்ட இந்த கோவில், அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பெற்றது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக், நடிகர் சூர்யா மற்றும் யோகி பாபுவும் தரிசனம் செய்துள்ளனர். நடிகை சினேகாவை கண்ட பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story



