சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய வடமாநில வாலிபர் கைது

X
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரை ஓட்டி வந்தவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ராம் (வயது 23) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

