குளச்சலில் தீ விபத்து சமையலறை சேதம்

X
குமரி மாவட்டம் குளச்சல், கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43) ஒரு தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஜெய ராணி வீட்டில் சமையல் செய்யும் போது கேஸ் தீர்ந்து போனது. உடனே அவர் வீட்டில் இருந்த வேறு சிலிண்டரை மாற்றி ஸ்டவ்வில் தீயை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராமல் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ள குழாயில் தீப்பிடித்து, உடனே சமையலறை முழுவதும் தீ பரவியது. அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் கருகி நாசமானது. சமையலறை மேற்கூரையில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. மின்பொருட்களும் அனைத்தும் நாசமானது. வீடு பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குளச்சல் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
Next Story

