பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் எந்த நேரத்திலும்  புகார் தெரிவிக்கலாம்
X
எஸ் பி , பேட்டி:
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றமில்லா, விபத்தில்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தல் தொடர்பாக தினமும் 6 முதல் 7 புகார்கள் வருகின்றன. எனவே அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் அந்த பணிகள் முடிந்து விடும். அதன் பிறகு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பின்னர் அங்கீகாரம் இல்லாத ஏஜென்சி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தெரிவி தெரிவிக்கலாம் குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் சார்பில் 1200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குமரியில் கனரக வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இது மட்டுமின்றி தேங்காபட்டிணத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே பள்ளிகள், கல்லூரிகள் நேரங்களில் கனரக வாகனங்கள் அந்தப் பகுதியில் செல்லாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். தற்போது தினமும் 150 பேர் வரை செல்போன் மூலம் புகார்களை தெரிவித்து வருகின்றனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிப்பவர் விவரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றார்.
Next Story