புதுகை: நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து

X
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (46). இவர் புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த பிரபாகரன் (33) மோதியதில் தியாகராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவரது சகோதரர் அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

