காவேரிப்பாக்கம் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் ஆய்வு

X
காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் நகர் மற்றும் சந்தைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து இந்த பகுதிகளில் சாலை வசதி செய்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் லதா நரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், மன்ற உறுப்பினர்கள் பாஸ் என்கிற நரசிம்மன், இந்திரா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

