ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை,

X
ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அத்தியாவ சிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்னதகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் எஸ்.விஜய குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் சோளிங்கர் துணை மின் நிலையத்தில் ஆத்தியாவ சிய மின்சாதன பராமரிப்பு பணி நடப்பதால் சோளிங்கர், கல்பட்டு, சோமசமுந்தரம், பாண்டியநல்லூர், கரிக்கல், எரும்பி, பத்மாபுரம், பாணாவரம், கீழ்பாலபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Next Story

