சேரன்குளம் அரசுப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு துணி பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

X
ஜூலை 3ஆம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச பிளாஸ்டிக் பை ஒழிப்பு தினம் சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.கண்ணன் அவர்கள் தலைமையேற்றார்கள். நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் எஸ்.கமலப்பன் முன்னிலையில் பள்ளியின் திட்ட அலுவலர் ஆர் ராஜ்குமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும், தங்களது பெற்றோர் மற்றும் அனைவரையும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டதுநாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் தொழிற்க்கல்வி ஆசிரியர் கே.பரஞ்ஜோதி வரவேற்றார் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஏ.புகழேந்தி நன்றி கூறினார்.
Next Story

