ராமநாதபுரம் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது

ராமநாதபுரம் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது
X
விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தைக்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்வதற்காக வழக்கறிஞரான மகன் வாதாடி ஜப்தி செய்ய வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த அபுபக்கர் (68), இவர் புது பள்ளிவாசலில் மோதியராக பணிபுரிந்தார். 2015 டிச., ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பேருந்தில் ராமேஸ்வரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற பஸ்சில் பயணம் செய்தார். கீழக்கரை அருகே வேகத்தடையில் ஏறிய பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் அபுபக்கர் கழுத்தெழும்பு, தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். இதற்காக இழப்பீடு கேட்டு அவரது மகன் வழக்கறிஞரான முகமது சதக்கத்துல்லா ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் 2023 ல் ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 353 வழங்க உத்தரவிட்டது. இந்த தொகையை திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவில்லை. இதன் காரணமாக வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்து 55 ஆயிரத்து 552 வழங்க கோரி நிறைவேற்றுதல் மனு செய்தார். வழக்கினை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மோகன்ராம் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன் படி நீதிமன்ற பணியாளர்கள் ராமேஸ்வரத்திலிருந்து திருநெல்வேலி செல்வதற்காக இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போது அர்சுபஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வழக்கறிஞர் மகன் சதக்கத்துல்லா நீதிமன்றத்தில் வாதாடி பஸ்சை ஜப்தி செய்ய வைத்தார்
Next Story