குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து எம்பி ஆய்வு

X
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 7தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து கனிமொழி கருணாநிதி எம்பி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் பழனி, மாவட்ட ஆட்சித்தலைவர் .இளம்பகவத், ஆகியோர் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுகுமாறன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் திரு.ஆர்.அருள்முருகன், இணை ஆணையர் திரு.ஞானசேகரன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் திருமதி சிவஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.பாலசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story

