கரூர்-கண் துடைப்பாக கலந்தாய்வு நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கரூர்-கண் துடைப்பாக கலந்தாய்வு நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூர்-கண் துடைப்பாக கலந்தாய்வு நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2025 -26 ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வித் துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வை கண்துடைப்பாக நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மாலை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சத்தியமூர்த்தி துணை செயலாளர் அருள் குழந்தை தேவதாஸ் அரவக்குறிச்சி வட்டார அமைப்பாளர் போதும் பொண்ணு, குளித்தலை வட்டார அமைப்பாளர் தேவகி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போதுமாநில முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோதமாக மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கி வரும் தொடக்க கல்வித்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும், 2025- 26 கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படாதால், உபரி ஆசிரியர்கள் மலைச்சுழற்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்பட உள்ள கடும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாவை நிறுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story